மதகுரு (பாகம் 1)

ஆசிரியர்: செல்மா லாகர்லெவ்

Category நாவல்கள்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaper back
Pages 188
Weight200 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



1931-ல் கல்கத்தாவில், இம்பீரியல் லைப்ரரியில், என்னுடைய பத்தொன்பதாவது வயதில், நான் முதன் முதலாக இந்தக் கெஸ்டா பெர்லிங் ஸாகாவைப் படித்தேன், அன்று முதல் இன்றுவரை இந்த இருபத்தைந்து வருஷங்களில் நான் இதை. ஆதிமுதல் அந்தம்வரை, ஐம்பது தடவைகளாவது படித்திருப்பேன். இப்போது மொழிபெயர்க்க உட்காரும்போதுகூட நாலு பக்கம் பொழிபெயர்த்தால் தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலுபக்கம் மொழி பெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது.
படிக்கும்தோறும், படிக்கும்தோறும் இந்த நாவலில் என் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தடவையும் புதிது புதிதாக நான் பல உணர்ச்சி அனுபவங்களைப் பெறுகிறேன். முந்திய தடவை கவணிக்காத பல புதுப்புது அர்த்தங்கள் ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் எனக்குத் தோன்றுகின்றன. செவ்மாலாகர்லெவ் என்கிற ஸ்வீடிஷ் ஆசிரியையிடம் எனக்கு ஒவ்வொரு தடவையும் கெஸ்டா பெர்லிங்கைப் படித்து முடிக்கும்போது பயமும் பக்தியும் அதிகரிக்கிறது. உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் நிற்கக் கூடியவை என்று நினைக்கத் தக்க நூல்களில் கெஸ்டா பொலிங்கும் ஒன்று என்பதை ஒவ்வொரு தடவையும் நான் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
செல்மா லாகர்லெவ் :

நாவல்கள் :

கவிதா பதிப்பகம் :