மனம் கொத்திப் பறவை
ஆசிரியர்:
சாரு நிவேதிதா
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88+?id=1020-0064-8769-2485
{1020-0064-8769-2485 [{புத்தகம்பற்றி ஒருநாள் மைலாப்பூர் க்ளப்பில் உணவருந்திக் கொண்டிருந்தேன். பக்கத்து மேஜையில் ஒரு நடுத்தர வயது மாதுவும், ஓர் இளம் பெண்ணும் பேசிக்கொண்டு இருந்தனர். பேச்சில் என் பெயர் இடம்பெறுவதைக் கேட்டு அவர்களைக் கவனிக்காதது போல கவனித்தேன். அந்த நடுத்தர வயது, "என்னடி இந்த சாரு நிவேதிதா. நோம்பு முடிச்சிட்டு மடியா வந்து விகடனைப் புரட்டினால் மாட்டுக்கறி, அது இதுனு எழுதி வைத்திருக்கிறான்?" என்றார். உடனே, எதிரில் இருந்த பெண், "அதெல்லாம் நீங்க ஏன் மாமி படிக்கிறேள்? என்னை மாதிரி சின்னப் பசங்க படிக்கிறதுல்ல அது?" என்கிறாள். அதற்கு அந்த மாது, "படிக்காம இருக்க முடியலியேடி.. ரொம்ப நன்னா எழுதறானே?" என்று பதில் சொல்லவும் நான் உச்சி குளிர்ந்து போனேன். விஷயம் என்னவென்றால், ஜப்பானியர்களின் உணவு முறை பற்றி நான் எழுதியிருந்த கட்டுரை சரியாக வரலட்சுமி நோன்பு அன்று வெளியாகி இருந்ததுதான் அந்தப் பெண்மணியின் ஆதங்கத்துக்குக் காரணம். ஆனால், அவர் குரலில் என் எழுத்தின் மீது இருந்த பிரியத்தை என்னால் உணர முடிந்தது.} {புத்தகம் பற்றி ஒருநாள் மைலாப்பூர் 'க்ளப்பில் உணவருந்திக் கொண்டிருந்தேன். பக்கத்து மேஜையில் ஒரு நடுத்தர வயது மாதுவும், ஓர் இளம் பெண்ணும் பேசிக்கொண்டு இருந்தனர். பேச்சில் என் பெயர் இடம்பெறுவதைக் கேட்டு அவர்களைக் கவனிக்காதது போல கவனித்தேன். அந்த நடுத்தர வயது, "என்னடி இந்த சாரு நிவேதிதா.நோம்பு முடிச்சிட்டு மடியா வந்து விகடனைப் புரட்டினால் மாட்டுக்கறி, அது இதுனு எழுதி வைத்திருக்கிறான்?" என்றார். உடனே, எதிரில் இருந்த பெண், "அதெல்லாம் நீங்க ஏன் மாமி படிக்கிறேள்? என்னை மாதிரி சின்னப் பசங்க படிக்கிறதுல்ல அது?" என்கிறாள்.அதற்கு அந்த மாது, "படிக்காம இருக்க முடியலியேடி.. ரொம்ப நன்னா எழுதறானே?" என்று பதில் சொல்லவும் நான் உச்சி குளிர்ந்துபோனேன்.விஷயம் என்னவென்றால், ஜப்பானியர்களின் உணவு முறை பற்றி நான் எழுதியிருந்த கட்டுரை சரியாக வரலட்சுமி நோன்பு அன்று வெளியாகி இருந்ததுதான் அந்தப் பெண்மணியின் ஆதங்கத்துக்குக் காரணம். ஆனால், அவர் குரலில் என் எழுத்தின் மீது இருந்தபிரியத்தை என்னால் உணர முடிந்தது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866