மனவிலங்கு

ஆசிரியர்: உதயணன்

Category நாவல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 240
Weight300 grams
₹180.00 ₹162.00    You Save ₹18
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866என்னைப் பாதிக்கிற விஷயங்களை - அவை தனிப்பட்ட விவகாரங்களாக இருந்தாலும் கூட சமுதாய பொது நோக்கில் வைத்துத்தான் நான் பார்க்கிறேன். எவையெல்லாம் தீர்க்கமான சிந்தனைக்கும் ஆய்வுக்கும் உரிய தகுதியைப் பெறுகின்றனவோ அவைகளையெல்லாம் எழுத்துவடிவில் வெளிப்படுத்த நான் தவறுவதில்லை. அந்த வெளிப்பாடுகளே என் நாவல்கள். இங்கே மனவிலங்கும் அவற்றில் ஒன்று.
உடலுக்குப் போடப்படும் விலங்கு -அது பூவிலங்கானாலும் சரி, பொன் விலங்கானாலும் சரி - எந்த காரணத்திற்காக - எந்த விளைவிற்காக போடப்பட்டாலும் கூட அதிலிருந்து தப்பிவிட மனிதனால் முடியும்தான். ஆனால் மனத்திற்குப் போடப்படும் விலங்கு அப்படியல்ல. அது நிரந்தரமானது. எளிதில் தப்ப முடியாது. உடலுக்குரிய விலங்கிலிருந்து தப்பி விடுபவர்கள் கூட இவ்விலங்கில் சிக்கித் திணறுவதுண்டு. எப்படி புறசாட்சிகளுக்கெல்லாம் மேற்பட்டதாய் மனச்சாட்சி விளங்குகிறதோ அப்படித்தான் புற விலங்குகளிலிருந்து உயர்ந்து நிற்பது மனவிலங்கு.
இதை அடைந்து மீள்வதைவிட இதில் சிக்காமல் வாழ நேர்வதுதான் யாருக்குமே அமைதியைத் தரும். இந்த உண்மைதான் இந்த நாவலில் உணரப்பட வேண்டிய அம்சம்.இது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட நாவல். எனவே அதை நினைவில் கொண்டு நாவலைப் படிப்பதே சரி.

உங்கள் கருத்துக்களை பகிர :
உதயணன் :

நாவல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :