மன அமைதிக்கு வழி

ஆசிரியர்: சுவாமி கோகுலானந்தர்

Category மனோதத்துவம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 246
ISBN978-81-7883-789-5
Weight300 grams
₹135.00 ₹121.50    You Save ₹13
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாழ்க்கையின் கோரக்கரங்களில் மாட்டித் தவிக்கும் மனிதர்களுள் பலரும், தங்களின் துயரச் சுமைகளை இறக்கிவைக்க, என்னை அணுகியதன் விளைவே இந்தப் புத்தகம் எனும் சுமைதாங்கி.பலரும் தங்கள் தனிப்பட்டத் துயரச் சுமைகளை என்னிடத்தில் கூறும்போது ஏறக்குறைய அவையனைத்தும் மனஉளைச்சல் சம்பந்தப் பட்டவையாகவே இருந்தன. இதற்கு ஒரு மாற்றுத் தீர்வுக் காண வேண்டி தொடர் சொற்பொழிவுகளை ஆற்ற முயன்றேன். பின்னர் அதுவே தற்போது தங்கள் கைகளில் புத்தக வடிவில் தவழ்கிறது.இந்த நூற்றாண்டு, மனிதர்களின் மனஅழுத்தத்தின் மேலாதிக்கம் பெற்ற காலம். இந்த மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழி, மனதைக் கட்டுப்படுத்து வதுதான். நமது மனதைப் பயிற்றுவிக்கத் தெரியாதவரை, பயனுள்ள வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது.
இந்த நூலில் மனஅழுத்தத்தையும், மனஉளைச்சல் சம்பந்தமான பிரச்சினைகளையும் இரு வேறு கோணங்களில் அணுகியுள்ளேன்,
1. கீழைநாட்டு முறை, 2. மேலைநாட்டு முறை.
மனதைக் கட்டியாள்வதற்கு நம் முன்னோர்களான யோகியர்கள் கூறியதையும் இக்கால நவீன மனோவியல் ஆய்வாளர்களின் கருத்துகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். மனஅழுத்தம், கவலை, பயம் ஆகியன உடல் ரீதியானபெரும் பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணங்களென அறிய முடிகிறது...

உங்கள் கருத்துக்களை பகிர :
மனோதத்துவம் :

ராமகிருஷ்ண மடம் :