மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு

ஆசிரியர்: நீதியரசர் ஏ.கே .ராஜன்

Category வணிகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperBack
Pages 61
Weight100 grams
₹65.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முனைவர் நீதியரசர் ஏ.கே.ராஜன் L.LD. சென்னைப் பல்கலைக் கழகத்தில், உலக நாடுகளிடைச் சட்டம் மற்றும் பல்வேறு அரசமைப்புச் சட்டங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர், தமிழ்நாடு அரசின் சட்டத்துறைச் செயலாளராகப் பணியாற்றியபோது இயற்றப்பட்ட பல சட்டங்கள் மற்ற பல மாநிலங்களிலும் சட்டமானது, மாணவப் பருவத்தில் வெளிப்படுத்திய ஒரு கோட்பாடு பின்னாளில் சர்வதேசச் சட்டமானது. அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், திருத்தம் செய்யப்பட்டது உயர் நீதிமற்ற நீதிபதியாக அளித்த தீர்ப்புகள் உச்சநீதிமன்றதால் உறுதி செய்யப்பட்டன. நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் தமிழ்நாடு அரசு கோவில்களில் அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராவதற்கு ஏற்ற பாடத் திட்டங்களை முடிவு செய்ய நியமிக்கப்பட்ட கமிட்டியிலும், அரசு நிர்வாகச் சீர்திருத்தக் கமிட்டியிலும் தலைவராக நியமித்தது. மத்திய அரசு கடலோர உயிரின வளர்ப்பு ஆணையத்தின் தலைவராக நியமித்தது அதன்பின் மீன் வளர்ப்பு பெரும் லாபமீட்டும் தொழிலாக மாறியது. அரசியல் சட்டம் பிரச்சனைகள் குறித்து சில நூல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.
இந்த நூலில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்.
அதில் அகில இந்தியக் கோட்டா முறை - எவ்வாறு ஏற்பட்டது, அது இன்றும் தொடகுவது சட்டப்படியானதா, மாநில அரசுகளின் உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
வணிகம் :

பாரதி புத்தகாலயம் :