மறந்திடுமோ மனதை விட்டு

ஆசிரியர்: கம்பிகளின் மொழி பிறேம்

Category கவிதைகள்
Publication கோபால் வெளியீட்டகம்
FormatPaperback
Pages 89
Weight150 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சிறு வயதிலிருந்தே சமூகத்தின்பால் அதீத பற்றுதல் இருந்திருந்தாலும் போருக்குப் பின்னரான இலக்கியமாகவே "கம்பிகளின் மொழி" எனும் தனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். இரண்டாவதாக "காய்ந்து போகாத இரத்தக் கறைகள்" எனும் குறுநாவலைத் தந்திருந்தார். அதனை ஒரு காதல் தம்பதியின் ரினூடாக போர்க்கதை சொல்லும் நூலாக்கியிருந்தார். இது மூன்றாவது நூலுருவாக்கம், தேசிய பத்திரிகைகள் உட்பட தொலைக்காட்சி மற்றும் இணையங்கள் ஊடாக பல்வேறு கட்டுரைகளையும் ஆக்கங்களையும், நேர்காணல்களையும் வெளியிட்டது மட்டுமன்றி வளர்ந்துவரும் பல இளவல்களை , இனங்காட்டிய பெருமையும் பிறேமைச் சாரும். வெளிப்படையாகப் பழகுவது போலவே பக்குவமாக வார்த்தைகளையும் பேசுவார். வஞ்சகமில்லாத துணிந்த நெஞ்சம், தன்னங்கம் இழந்திருந்தும் பிறர் மனதை களிப்பூட்டும் கலகலப்பானவர். சோகங்களை சிரிப்பால் மறைக்கும் சிறந்த சிந்தனையாளன். இவரது காலப்பாதையில் கவிதையூர்தி ஆட்டமில்லாது அமைதியாகவே பயணிக்கிறது. அழகிய தமிழில், இலகுவான மொழி நடையில் வார்த்தைகளால் கோர்க்கப்பட்டிருக்கும் இக் கவி நூல். சகல விதமான எதிர்பார்ப்புக்களையும் கடந்து ஈழத்து கலித்தடத்தில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கும் , எனும் நம்பிக்கை எனக்குண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :