மலர் மஞ்சம்
₹690.00 ₹655.50 (5% OFF)

மலர் மஞ்சம்

ஆசிரியர்: தி. ஜானகிராமன்

Category நாவல்கள்
Publication ஐந்திணைப் பதிப்பகம்
Pages 584
Weight600 grams
₹270.00 ₹256.50    You Save ₹13
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உண்மையைத் தேடும் தவம் நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக் கெல்லாமோ ஆசைப்பட்டு தங்களையே நகல்களாக்கிக் கொண்டுவிடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக்கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள். _ மனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும், தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியார்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையும் தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும் பிறர் ஒப்புக் கொள்ளா விட்டாலும் சரி எழுத்துக்கும் அடிப்படையாக இருக்கும் பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத் தானிருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தி. ஜானகிராமன் :

நாவல்கள் :

ஐந்திணைப் பதிப்பகம் :