மஹாகவியின் ஆறு காவியங்கள்

ஆசிரியர்: எம்.ஏ. நுஃமான்

Category இலக்கியம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 240
ISBN978-81-7720-093-3
Weight300 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



1971 ஜூன் மாதம் மஹாகவி காலமானார். அதைத் தொடர்ந்து அவரது எழுத்துகள் அனைத்தையும் நாலுருவாக்க, வேன்டும் என்று மஹாகவியின் நண்பர்கள் சிலர் சேர்ந்து செயற்பட்டோம். மஹாகவி நால் வெளியிட்டுக் குழு ஒன்றை அமைத்தோம். காலஞ்சென்ற நண்பர் வி. சிங்கார வேலன், சண்முகம் சிவலிங்கம், மயிலங்கூடலூர் பி. நடராசன் முதலிய சிலர் என்னுடன் ஒத்துழைத்தனர். அதன் பயனாக மஹாகவியின் 'ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்' என்ற காவியத்தை 1971 டிசம்பரில் எம்மால் வெளியிட முடிந்தது. எனினும், மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு தொடர்ந்து செயற்பட முடியவில்லை. ஆயினும், மஹாகவியின் இரண்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு, 1973 ஐ 9னில் 'வீடும் வெளியும்' என்ற கவிதைத் தொகுதியை வாசகர் சங்கத்தின் மூலம் நான் வெளியிட்டேன். அப்போது தில்லிப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் சாலை இளந்திரையன் மஹாகவியின் நூல் ஒன்றை இந்தியாவில் வெளியிடப் பெரிதும் விரும்பினார். மஹாகவி தமிழகத்தில் பரவலாக அறியப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் மஹாகவியின் 'சடங்கு', 'கந்தப்ப சபதம்' ஆகிய இரு காவியங்களையும் இளந்திரையன் மூலம் வெளியிட ஏற்பாடு செய்தேன். 1974 ஜூலையில் பாரி நிலையத்தின் மூலம் 'மஹாகவியின் இரு காவியங்கள்' என்ற பெயரில் சாலை இளந்திரையன் இவற்றை வெளியிட்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஏ. நுஃமான் :

இலக்கியம் :

அடையாளம் பதிப்பகம் :