மாஜினி சாய்ந்த கோபுரம்

ஆசிரியர்: சி.பி.சிற்றரசு

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




" தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்பது குறள் வரையும் கோலம். அப்படித் தன்னுடைய தோற்றத்தினாலே உலகத்தின் எல்லையைத் தொட்டுப் பார்த்தவர்கள், சூரியனின் சுடர்முகத்தை எட்டிப் பார்த்தவர்கள் மிகச் சிலராகத்தான் இருக்கக் கூடும். அப்படிப் பட்டவர்களுள் ஒருவர்தான் மாஜினி என்பவர். இவர் சிதறிக் கிடந்த இத்தாலியை ஒன்றுபடுத்தியவர். அதன் விடுதலைக்காக வீரத் தியாகம் புரிந்தவர். அவரிடம் அச்சமில்லை ; நடுங்குதலில்லை ; நாட்டின் கனவு நெஞ்சமிருந்தது. நாட்டைப் பற்றிக் கனவு கண்டவரை நாட்டைவிட்டே துரத்தியது கொடுங்கோன்மை அரசு. நல்ல திட்டங்கள் பல தந்தவரை நாடோடியாக வாழச் செய்தது நாடாண்ட அரசு.1805 இல் பிறந்தவர்; இத்தாலியின் சுதந்திரத்தைக் காணப் பிறந்தவர். இரண்டு முறை மரண தண்டனை பெற்றவர்.
இப்படிப்பட்ட ஒரு மாவீரன்தான் மாஜினி. உலகச் சரித்திரங்கள் உரசிப் பார்த்த அவரது வாழ்க்கைச் சுவடுகளின் வரைபடமே இந்த மாஜினி என்னும் நூல். அவர் கண்டுரைத்த வாழ்க்கை முறைகளையும் சிக்கலும் சிதைவும் கொண்ட வாழ்க்கைச் செயல்களின் சரிவுகளைச் சொல்லும் ' சாய்ந்த கோபுரம்' என்னும் பெயரில் ஏற்கெனவே வெளிவந்த இந்நூல் இப்போது அவர் பெயரிலேயே மாஜினி எனப் புதிய மெருகு பெறுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.பி.சிற்றரசு :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :