மாந்தரீகச் சித்தர்கள்
ஆசிரியர்:
ஜெகாதா
விலை ரூ.75
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1263-1362-9818-5675
{1263-1362-9818-5675 [{புத்தகம் பற்றி மந்திரம் என்றாலே வசிய சக்திக்கு வழிகோலித் தீமை எரியக்கூடிய வழிபாட்டுச் சொல் என்ற அச்சம் கலந்த மரியாதை மக்களிடையே நீண்ட நெடுங்காலமாக இருந்து வருவது உண்மை! அது நிச்சம் தவறாக உணரப்படும் அசரீரியாகவே கருதத் தோன்றுகிறது. மானுட தேகம் விசித்திரமான மகத்துவ மர்மம் செறிந்த இரசாயனக் கூடமாகவே சித்தர்கள் அறிவர். நம் உடம்பினுள் அணுக்கூட்டங்களாக ஆற்றல் சிதறிக் கிடக்கின்றது. உடலுக்குள்ளே உயிர் நிலைத்து வாழ பல உயிர்ச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த அணுக்கூட்டங்களை ஒருங்கிணைத்து ஒருமுகமாக திரட்ட மந்திரம் தேவைப்படுகிறது.
<br/>மந்திரங்கள் அற்புதங்களைக் கொண்டு வருமா என்ற கேள்விக்கு நிச்சயமாக இறைவனின் துணையுடன் இது சாத்தியமாகும் என்ற உத்தரவாதமும் அளிக்கின்றனர் சித்தர்கள். இறைவன் மந்திரமேனியாக விளங்குவதையும் அது மனித வடிவமாக இருப்பதையும் திருமூலரின் திருமந்திரம் கூறுகிறது. மந்திரத்தை ஓதும்போது அதனுடைய பொருளை மனதில் வாங்கி ஓதுகின்றவனின் சித்தத்தில் அந்த மந்திரத்திற்குரிய வழிபடு பொருள், அந்த மந்திரத்திற்குரிய மூர்த்தியின் வடிவு நிலை, மந்திரத்தின் பொருள் ஆகியவை முழுமையாகப் பதியும் போதுதான் அந்த மந்திரத்திற்குரிய ஒலி அதிர்வுகள் முழுமை பெற்று எழுகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866