மானவர்மன்

ஆசிரியர்: உதயணன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 370
Weight450 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




பொத்தகுட்டன் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரது வரலாற்றுக்கிடையே வாழ்ந்த மானவர்மனே இந்த நூலின் கதாநாயகன். இதில் நரசிம்மவர்மரும் சேனாதிபதி பரஞ்சோதியும், திருநாவுக்கரசரும் வருகிறார்கள். இவர்களைப்பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள் மிகவும் சிறப்பாகச் சொல்லித் தமிழ் மக்களின் மனதில் பதியச் செய்துவிட்டார். அவர் உருவாக்கி வைத்திருந்த பெருமையை (Image) நான் மாற்ற விரும்பவில்லை. அந்தப் பாத்திரங்களின் பெருமை சிதையாமல் என் பாணியில் மானவர்மன் நாவலை எழுதுவதென்பது சிரமமானது என்பது இதை எழுதும் போது தான் தெரிந்தது. மூன்று மாத காலம் ஆராய்ச்சி செய்துவிட்டு அடுத்த மூன்று மாத காலத்தில் உருவாக்கப்பட்டது இந்த நாவல். என்னால் முடிந்த வரை சுவை குன்றாமல் கதையைச் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெறும் கதாபாத்திரங்களின் பெயரையே அத்தியாயங்களின் பெயராகச் சூட்டியிருக்கிறேன். சரித்திரக் கதை என்பது விண்ணுலகில் எங்கோ இருக்கும் ஒரு கிரகத்தின் கதையல்ல. அதுவும் பூமியின் கதை தான். சமூகத்தின் கதைதான். பழங்காலத்துச் சமூகத்தின் கதைதான் சரித்திரக் கதை. எனவே சமூகத்திலும் வாழ்க்கையிலும் உள்ள அனைத்து ரசங்களும் இந்நாவலில் உண்டு. இது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உதயணன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :