மார்க்கெட்டிங் மாயாஜாலம்

ஆசிரியர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

Category வணிகம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 136
ISBN978-81-8368-103-2
Weight200 grams
₹190.00 ₹180.50    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மார்க்கெட்டிங். இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும், கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் தென்படுவதன் பின்னால் உள்ள சூட்சுமம். ஹைவே முழுவதும் ஹட்ச் ஹட்ச் என்று நாய்க்குட்டி தும்மியபடி நம்மைப் பின் தொடர்வதன் பின்னணி. மொபைல் எதுக்கு? டாக் பண்ணுறதுக்கு என்று த்ரிஷா உயரே இருந்து கண்ணடித்துப் புன்னகை செய்வதன் தேவ ரகசியம்.
வாடிக்கையாளரைக் குறிபார்த்துச் சுண்டி இழுப்பது. அந்த விஷயத்தில் போட்டியாளர்களை முந்திக்கொண்டு தன்னைத் திணித்துக்கொள்வது. பிசினஸில் இது மிக முக்கியம். அதற்குத்தான் தேவை மார்க்கெட்டிங். மார்க்கெட்டிங் என்பது உங்கள் தொழிலில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம். உங்களுக்கு எது வேண்டும்? வெற்றிதானே? சுய தொழில் புரிவோருக்கும், மிகப்பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் வேலை தேடிக்கொண்டிருப்போருக்கும் ஏன், கடைக்குப் போய் காசு கொடுத்து ஏதாவது வாங்கும் அத்தனை பேருக்குமே இது ஓர் அட்சய பாத்திரம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி :

வணிகம் :

கிழக்கு பதிப்பகம் :