மாலை நேரத்து மயக்கம்
ஆசிரியர்:
பாலகுமாரன்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1662-7555-9677-9825
{1662-7555-9677-9825 [{புத்தகம் பற்றி வீட்டை விட்டு வெளியே வந்ததும் வேறு ஒரு குளிர் சுற்றிக் கொண்டது. வீட்டுக்குள்ளும் குளிர்தான். ஏ.ஸி. குளிர். பொய் குளிர். ஈரத்துண்டை நெஞ்சில் போர்த்துக் கொள்கிற மாதிரி குளிர். வெளியே விடியற் காலை நாலேகால் மணிக்குத் தோட்டம் முழுவதும் வீசும் காற்று வேறு விதம். வெகு நாள் பீரோவில் வைத்திருந்த பட்டுப்புடவை உடம்பு முழுக்கப் படும்படி இழுத்துப் போர்த்திக் கொள்கிற சுகம். விடியற்காலை குளிர் என்பது அம்மா மாதிரி. குளிர்கூட இல்லை, இந்த இருட்டே கூட அம்மா மாதிரிதான். ஆழ்ந்த அமைதி. பயமுறுத்துகிற இருட்டாய் இல்லாது வானம் மட்டும் வெளிச்ச இதழ் பிரித்து பூமியைப் பார்த்து மெல்ல செய்யும் புன்முறுவல். அம்மாவின் மெட்டி மாதிரி, கால் கொலுசு மாதிரி, பறவைகள் சப்தம் போடும் பட்டுப் புடவை மாதிரி காற்று வீசும்}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866