மாவோ: என் பின்னால் வா

ஆசிரியர்: நாகூர் ரூமி

Category வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperBack
Pages 174
ISBN978-81-8368-476-7
Weight200 grams
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மாவோ முடிவு செய்தபோது அவனுக்கு வயது பதிமூன்று. வேறு வழி தெரியவில்லை . மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தான் மாவோ. பின்னால் அவன் தந்தை துரத்திக்கொண்டிருந்தார். மாவோ, நில்! ஓடாதே! மாவோ வேகம் பிடித்தான். என்ன ஆனாலும் சரி. இவர் கையில் சிக்கக் கூடாது. ச்சே! என்ன மனிதர் இவர்? எந்த முகத்தோடு என்னைத் துரத்துகிறார்? பழக்கப்பட்ட பகுதிதான் என்பதால் மாவோவால் சீறிப்பாய்ந்து வேகமாக ஓடமுடிந்தது. மாவோவின் தந்தை தன் பருத்த உடலைச் சுமந்து கொண்டு கைகளை வீசியபடி விரைந்து கொண்டிருந்தார். அவர் போட்ட கூச்சலில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கூடி விட்டார்கள். என்ன ஆச்சு ஷன்செங்? ஏன் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்? திருடன் யாரை யாவது பிடிக்கப்போகிறீர்களா? ஓடிக்கொண்டே பதிலளித்தார் அவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாகூர் ரூமி :

வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :