மிடறு மிடறாய் மௌனம்

ஆசிரியர்: வதிலைபிரபா

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 64
Weight150 grams
₹80.00 ₹77.60    You Save ₹2
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புறக்கணிப்பின் மொழியாக மௌனம் மாறும்போது உறவுகள் கடினப்பட்டு விடுகின்றன. இளகிய இதயமும் சுடும் பாறையாகி விடுகிறது. அதனால்தான் வதிலைபிரபா பெருஞ் சத்தத்துடன் மௌனத்தை உடைத்துக் கொண்டிருக்கிறார். துரோகம் எவ்வளவு கொடிய நெருப்பு? அதில் எரிந்து கருகி வீழ்ந்தவர்கள் எத்தனை பேர்? பஞ்சமா பாதங்களில் ஒன்றல்லவா துரோகம்? ஆனால் அந்த நெருப்பில் இவர் வீழ்ந்துவிடவில்லை. புடம் போட்ட தங்கமாகப் பொலிந்து எழுகிறார். அதுதான் ஞானம். அதன் மொழிதான் மௌனம். அதுவெறுப்பையோ புறக்கணிப்பையோ கொண்டிருப்பதில்லை. ஆசையோ விருப்பங்களோ அதற்கு இல்லை. அது இயல்பு எதுவென அறிந்த மௌனம். உலகின் வேரை ஆய்வு செய்யும் மௌனம். எளிய வார்த்தைகள் கொண்டு எழுதப்பட்ட இக் கவிதைகளில், 'மௌனத்தைப் போலவே ஆழமான அர்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. மிடறு மிடறாய் அவர் பருகிய மௌனத்தைச் சொட்டுச் சொட்டாய் அனுபவியுங்கள். அதன் ருசியை உங்கள் மௌனமே உங்களுக்கு உணர்த்தும்.
பிருந்தாசாரதி
திரைப்பட இயக்குநர்


உங்கள் கருத்துக்களை பகிர :
வதிலைபிரபா :

கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :