மீத்தேன் அகதிகள்

ஆசிரியர்: த.செயராமன்

Category சுற்றுச்சூழல்
Publication புத்தகச்சோலை
FormatPaperback
Pages 208
Weight250 grams
₹150.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், மீத்தேன் எதிர்ப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான த.செயராமன் எழுதியுள்ள ‘மீத்தேன் அகதிகள்’ புத்தகத்தில், மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் திட்டங்களுக்காக மேற்கொள்ளப்படும் நீரியல் விரிசல் முறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நீரியல் விரிசல் செய்யப்பட்ட பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டதையும் மேலை நாடுகள் இம்முறையைக் கைவிடத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். த.செயராமன் வரலாற்றுத் துறை பேராசிரியர் என்பதால், அரசியல் சூழல்களின் காரணமாகவும் சூழலியல் பாதிப்புகளின் காரணமாகவும் உலகம் முழுவதும் அகதிகளாக இடம்பெயர்பவர்களின் துயரக் கதைகளையும் விவரமாக எழுதியிருக்கிறார். சுற்றுச்சூழல் பாதிப்புகள் புலம்பெயர்வுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிப்பதாகவே இந்நூல் அமைந்துள்ளது."

- தி இந்து.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுற்றுச்சூழல் :