மீனவ வீரனுக்கு ஒரு கோயில்

ஆசிரியர்: ராம்

Category ஆய்வு நூல்கள்
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 100
Weight150 grams
₹90.00 ₹76.50    You Save ₹13
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




மீனவவீரனுக்கு ஒரு கோவில் என்ற இந்த நூலை நாட்டார் வழக்காற்று ஆய்வு வரிசையில்தான் சேர்க்க முடியும். இது முழுவதும் கள ஆய்வுச் செய்திகள் வழியும் கதைப்பாடல்கள் வழியும் உருவாக்கப்பட்டது. ராம் தன் களஆய்வில் மன்னத்தேவன் கோவில் குறித்த முக்கியமாக கிடைத்த இரண்டு தகவல்களைச் சொல்லுகிறார். களஆய்வுச் செய்திகளைச் சேகரித்துப் பதிவு செய்தது என்ற அளவில் இந்த நூலுக்கு முக்கியத்துவம் உண்டு. இவரது முதல்நூலின் அணிந்துரையில் இவர் பேரில் எனக்கு நம்பிக்கை வருகிறது என்று எழுதினேன். இந்நூலில் இது உறுதியாகிவிட்டது.அ. கா. பெருமாள் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்அறம் சார்ந்த நமது முன்னோரின் வாழ்வு நாட்டுப்புற வாய் வழிப் பாடல்களில் கலாச்சார எச்சங்களாய் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. புதர் மண்டிக்கிடக்கும் இந்தப் பொக்கிஷங்களை ஆராய்ந்து அறிந்து அதன் மூலம் நமது பண்பாட்டு வேர்களைத் தொட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை அளிக்கிறது தம்பி ராமின் மீனவ வீரனுக்கு ஒரு கோயில் என்ற இந்த ஆராய்ச்சி நூல். பரதவரின் பூர்வீகம் அறிய இந்த நூல் இன்னுமொரு திறவுகோல். தம்பி ராமின் முயற்சியும் ஒருவகையில் பரதவரின் இனமீட்டுருவாக்கம் தான். ஆர்.என். ஜோ டி குருஸ் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்இந்நூல் ஆசிரியர் முழு நேரப் பத்திரிக்கையாளராகப் பணிபுரிந்து வருகிறார். குமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். இவரது முதல் நூல் ராமன் என்கிற காந்தி ராமன். இரண்டாவது நூல் ஊர் சுற்றிப் பறவை (குமரி மாவட்டத்தில்ஒரு சரித்திரப் பயணம்).

உங்கள் கருத்துக்களை பகிர :
ராம் :

ஆய்வு நூல்கள் :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :