முடிந்து போன தசையாடல் பற்றிய கதை

ஆசிரியர்: மு. பொன்னம்பலம்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatHardbound
Pages 177
ISBN978-81-89945-68-8
Weight350 grams
₹150.00 ₹145.50    You Save ₹4
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இவை நீங்கலான ஏனைய அநேகமான கதைகள், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தையும், அதன் விளைவுகளையும் கருப் பொருளாகக் கொண்டுள்ளன. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்து அது படிப்படியாக எடுத்த பரிணாம - பரிமாணப் போக்குகளை வீடும் பல்லக்கும், வெட்டு, சீதை, துச்சாதனர்கள், அன்பு, கைது செய்யப்பட்ட கிராமம், துவக்குப் பிடியால் வாங்கிய அடி ஆகியவை விளக்கிநிற்க, இத்தனை அனர்த்தங்களுக்கும் காரணமாய் இருப்பது புரையோடிய சிங்கள இனவாதமே என்பதை மஹாநாமதேரர் மான்மியம் என்னும் ஆக்கம் புத்த சமயக் கொண்டாட்டங்களின் வடிவிலேயே தருகிறது. இன்று ஈழத்தில் தமிழர் விடுதலைப் போராட்டம் தோல்வியை வந்தடைந்துள்ளது. அப்படியெனில், விடுதலைக்கான இத்தகைய எழுச்சியும் லட்சக்கணக்கான மக்களும் போராளிகளும் கொடுத்த பலிகளும், செய்த தியாகங்களும் காற்றோடு கலந்துபோன அர்த்தமற்றவையா? இங்கேதான், அரவிந்தர் கூறுவது, இந்த எழுச்சியை மேற்கொண்ட இனத்திற்கு ஆறுதல் தருவதாய் உள்ள து.
ஒரு தேசிய இனம் தேசியரீதியான சுயதியாகம் என்னும் செயலுக்கு ஆற்றல் பெறும்போது அதன் எதிர்காலத்தை உறுதிப் படுத்திக்கொள்கிறது. மொத்தத்தில் தியாகமே விடுதலையின் விளை நிலம். இந்நூல் விடுதலையின் வெவ்வேறு தளங்களின் பார்வை விரிப்பாகவே நிற்கிறது. ஏற்கனவே நான் வெளியிட்டிருந்த 'கடலும் கரையும்' சிறுகதைத் தொகுப்பின் தொடர்ச்சியாகவே இதைக் காணலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :