முன்தோன்றி மூத்தகுடி
₹200.00 ₹194.00 (3% OFF)

முன்தோன்றி மூத்தகுடி

ஆசிரியர்: குணா

Category தமிழ்த் தேசியம்
Publication தமிழக ஆய்வரண்
FormatPaperback
Pages 204
Weight300 grams
₹200.00 ₹194.00    You Save ₹6
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



2002 நவம்பர் 25 முதல் 2006 மே வரையில் மூன்றரை ஆண்டு கள் வெங்காலூர்ச் சிறையில் அடைபட்டுக் கிடந்தபோது எழு திய பன்னிரு கட்டுரைகளுடன், தளைப்படுவதற்குச் சில மாதங் களுக்குமுன் எழுதித் தமிழர் முழக்கம் ஏட்டில் வெளியான முதன் மொழி தமிழே! சோம்ஸ்கி சொல்கிறார் என்னும் கட்டுரை யையும் சேர்த்து ஒரு தொகுப்பாக ஆக்கப்பெற்ற நூலே இந் நூல்,சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனின்மீது நக்கீரர் பாடிய புறநானூற்றுப் பாடலில் (395) அறப்பெயர்ச் சாத்த னின் வழிவந்தவர்களே நாங்கள்' என்றோ , 'அறப்பெயர்ச் சாத்த னுக்குக் கிணைப்பறை கொட்டிப் பாடுகின்ற கிணைப்பொருநரா வோம்' என்றோ பொருள்படும் அரியதோர் செய்தி காணக் கிடக் கின்றது. அறப்பெயர்ச் சாத்தனைப் பாசண்ட சாத்தன் என்று குறிப்பிடுவதும் வழக்கம், தொன்னூற்றாறு வகையான மெய்யியல் விளக்கங்களைக் கற்றுத் தேர்ந்த கடவுள் மறுப்புக் கோட்பாட்டின ரையே பாசண்டர் என்றனர். தமிழ் அறிவர்கள் தொன்றுதொட்டு வளர்த்தெடுத்த அணுக்கொள்கையைத் தழுவிய அறிவியல் கோட் பாட்டை உள்ளடக்கியதே பாசண்டம் என்னும் மெய்ம்மை இத னால் விளங்கும். தொல்தமிழ் அணுக்கோட்பாட்டின் அடிப் படையிலான ஆசீவகநெறியைத் தோற்றுவித்த மற்கலி தமிழரே என்பதைச் சொல்லும் கட்டுரையே முதற்கட்டுரை, மேற்சொன்ன புறநானூற்றுப் பாடலைப் பாடிய நக்கீரர் ஓர் ஆசீவகராகவே இருந் தார் என்பதை உய்த்தறிய இக் கட்டுரை உதவும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
குணா :

தமிழ்த் தேசியம் :

தமிழக ஆய்வரண் :