முருகவேள் பன்னிரு திருமுறை

ஆசிரியர்: சதுரா ஜீ.ச.முரளி

Category ஆன்மிகம்
Publication சதுரா பதிப்பகம்
FormatHardbound
Pages 1381
Weight1.90 kgs
₹1000.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பத்துப்பாட்டு நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பகுதியைப் போல முதல் நூலாக அமைந்து விளங்குவது திருமுருகாற்றுப்படை இது 315 அடிகளை உடைய ஆசிரியப்பா இதனை இயற்றியவர் மதுரை கணக்காயர் மகனார் நக்கீரர். சங்க காலத்திற்குப்பின் தோன்றியவர் எழுதிய நூல் என்றாலும் இறை வழிபாட்டு நூலாதலால் இதைப் பத்துப்பாட்டில் முதலில் அமைத்தனர். இந்நூலில் சிறப்பினை அறிந்து, இதனை ஆன்றோர் பதினோராவது திருமுறையில் அமைந்துள்ள நூல்களுள் ஒன்றாகச் சேர்த்துள்ளனர்.
திருமுருகாற்றுப்படை தவிர மேலும் முருகப் பெருமானைப் பற்றிய ஆற்றுப்படை நூல்களான அணி முருகாற்றுப்படை, அருள் முருகாற்றுப்படை, இயல் முருகாற்றுப்படை, செய முருகாற்றுப்படை, பொரு முருகாற்றுப் படை, வரு முருகாற்றுப்படை, வேல் முருகாற்றுப்படை, ஒரு முருகாற்றுப்படை என எட்டு நூல்களும் முருகனாகிய தெய்வத்தைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அமைந்துள்ளன. முருகப்பெருமானின் சிறப்பு, வீரம், அவன் குடிகொண்டுள்ள ஆறு படை வீடுகளில் சிறப்பு முதலிய செய்திகள் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படையில் முருகனுக்குத் திரு என அடைமொழி கொடுத்திருப்பதைப் போன்று, இந்த ஆற்றுப்படையில் அமைந்துள்ள நூல்களில் தலைப்புகளில், அணி, அருள், இயல், சேய் பொரு, வரு, வேல், ஒரு என்று அடைமொழிகள் தரப்பட்டுள்ளதைக் காண முடிகிறது...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :