மொபைல் ஜர்னலிசம் நவீன இதழியல் கையேடு
ஆசிரியர்:
சைபர் சிம்மன்
விலை ரூ.225
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81?id=1526-7777-0607-5111
{1526-7777-0607-5111 [{புத்தகம் பற்றி செல்பேசி நம்முடைய ஆறாவது விரலாக எப்போதோ மாறி விட்டது. தகவல் தொடர்பு தொடங்கி பொழுது போக்குவரை செல் பேசி நமக்கு அளிக்கும் சாத்தியங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்துவருகின்றன. அதன் ஒரு பகுதிதான், மோஜா எனப்படும் மொபைல் ஜர்னலிசம். கையில் ஒரு செல்பேசி இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் இன்று ஒரு பத்திரிகையாளராக மாறி எந்தவொரு செய்தியையும் பொதுமக்களிடம் கொண்டு சென்று விடமுடியும். செய்தி சேகரிப்பதில் தொடங்கி, தகவல்களைச் சரிபார்ப்பது, திருத்துவது, புகைப்படங்களோ வீடியோவோ சேர்ப்பது என்று அனைத்தையும் ஒரு செல்பேசியில் செய்துமுடிக்கலாம். காட்சி, ஒலி எழுத்து என்று அனைத்து வழிகளிலும் உங்கள் எண்ணங்களை லட்சக்கணக்கான மக்களுக்குக் கொண்டு சேர்க்கலாம். வெறும் கருவி மட்டுமல்ல, செல்பேசி என்பது ஒரு வலுவான ஆயுதம். சாமானியர்கள் தொடங்கி அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் வரை உலகம் முழுவதிலும் பலர் இன்று செல்பேசி இதழியலின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். டிஜிட்டல் உலகைத் தொடர்ந்து கவனித்துப் பதிவு செய்து வரும் சைபர் சிம்மனின் இந்நூல் இதழியல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவது உறுதி.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866