மொழிப்பற்று

ஆசிரியர்: மு.வரதராசன்

Category கட்டுரைகள்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 128
Weight100 grams
₹35.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழர் இன்று செய்யத்தகாத செயலில் ஈடுபட்டுத் தம் வலிமையைக் குறைத்துக்கொள்ளலாகாது. 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே!' என்னும் உண்மையை எவர் மறந்தாலும் மறக்கலாம்சிறுபான்மையோர் மறத்தலாகாது. மொழி காலத்தில் இமயம் முதல் குமரிமலை பஃறுளியாறு வரையில் பரவியிருந்த பெருமொழிதான்; ஆனால் இன்று தென்னிந்தியாவில் இரண்டரைக் கோடி மக்கள் மட்டுமே பேசும் மொழியாக சிறுபான்மையோரின் மொழியாக குறுகிவிட்டது. இந்த நிலையில் தமிழ்மொழி வாழ வேண்டுமானால் தமிழர் ஒன்றுபட்டு முழங்க வேண்டும்; ஒன்றுபட்டு வழக்காட வேண்டும். இல்லையேல், இந்தி மத்திய அரசாங்க மொழியாக மட்டும் நிற்காமல், ஆங்கிலம்போல் அரசினர் மொழியாகவும் போதனை மொழியாகவும் திணிக்கப்படுவது உறுதி. அப்போது பழிக்கு உரியவர் யார்? ஒற்றுமை குலைந்து மொழியைக் காக்க வகை அறியாமல் கைவிட்டு இந்தத் தலைமுறையில் வாழ்ந்த தமிழரே பழிக்கப்படுவர்...

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.வரதராசன் :

கட்டுரைகள் :

பாரி நிலையம் :