மோட்டார் மன்னன் ஜி.டி. நாயுடு

ஆசிரியர்: அம்பிகாசிவம்

Category வாழ்க்கை வரலாறு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹10.00 ₹9.50    You Save ₹0
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மோட்டார் மன்னன் ஜி.டி. நாயுடு ஏட்டுக் கல்வியை விட அனுபவ அறிவே உயர்ந்தது என்பதற்கு அடையாளமாக இன்றும் பலர் இருக்கிறார்கள். பள்ளிக்குச் சென்று படிப்பதைவிட அனுபவத்தில் அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர்களில் ஒருவர் ஜி.டி. நாயுடு. அவர் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல சாதனைகளைப் புரிந்தவர். அவரை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளாமல் போனதுதான் துரதிர்ஷ்டம். அவரை மட்டும் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இன்று உலக அளவில் தமிழகம் பேசப்பட்டிருக்கும். அவருடைய அறிவாற்றல் அப்படி.பள்ளிக்குச் சென்று அவர் படித்ததென்னவோ மூன்றாம் வகுப்புதான். ஆனால் அவர் செய்த சாதனைகளோ இன்று என்ஜினியரிங் படிப்பவர்களால் கூட செய்ய முடியாதவை.கோவையில் அமைந்திருந்த அவருடைய இல்லத்திற்கு பெரிய பிரபலங்கள் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருப்பது வழக்கம். அவர் பணம் சம்பாதித்ததைவிட அதிக அளவில் நண்பர்களைச் சம்பாதித்து வைத்திருந்தார்.அரசியல், சினிமா, பத்திரிக்கை என்று பல்வேறு துறைகளிலும் அவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள். அத்தனை பிரபலமானவர்கள் - நண்பர்களாக இருந்தபோதும் அவர் அனைவரிடமுமே நன்றாகப் பழகக்கூடியவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அம்பிகாசிவம் :

வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :