மௌன ஒத்திகைகள்

ஆசிரியர்: சிவமணி

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 80
ISBN978-81-943467-1-5
Weight50 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'மௌன ஒத்திகைகள்' என்னும் இந்தப் புத்தகத்தில் வார்த்தைகளை வசப்படுத்த வசப்பட்ட ஒரு எதிர்பாலினம் வாசிக்கும் மனசுக்குத் தேவை. "மௌன ஒத்திகைகள் ஆண்மையையும் பெண்மையையும் பற்றிப் பேசுகின்றன. அவனுக்கும் அவளுக்கும் நிரம்பி வழியும் நினைவுகளில் மௌன ஒத்திகைகளை அரங்கேற்றும் இந்த வரிக் கவிதைப் புத்தகம் ஒரு சொல்லைக் கவிதையாக்கிச் சுகம் காட்டுகிறது. ஒரு மாலையில் ஒரு கவிதைக்காரியுடனோ இல்லை கவிதைக்காரன் உடனோ இந்தப் புத்தகத்தைப் பிரித்தால் அதிகாலை அந்த இருவரையும் ஒன்றாக்கி ஒரு உன்னதமான கவிதையை எழுதவைக்கும்.
திரு. அகத்தியன் திரைப்பட இயக்குநர்
நிரந்தரப் புன்னகையை உதடுகளில் உட்காரவைத்திருக்கும் சிவமணி என் நெஞ்சுக்கு நெருக்கமானதில் அதிசயமொன்று மில்லை. அதிலும் அவர் பேராளுமை சோலையாரின் பேரன் என்ற செய்தி இன்னும் என்னை ஈர்த்தது. அதிகம் தமிழ் புழங்காத அரபு தேசத்தில் வசித்தாலும் எல்லோருக்குமான இயல்பான நடை அவரிடமிருக்கிறது. ஒட்டகப் பால் குடித்து பேரிச்சை மரநிழலில் இளைப்பாறும் வாழ்க்கைக்குப் பழகிப் போயிருந்தாலும் இவரது கவிதைகள் நம்மூர் கண்மாய்த் தண்ணீராய் இனிக்கிறது. நண்பர் சிவமணியின் இந்த இலக்கிய முயற்சி
கவிஞர் விவேகா
திரைப்படப் பாடலாசிரியர்


உங்கள் கருத்துக்களை பகிர :
சிவமணி :

கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :