யவன ராணி 1
ஆசிரியர்:
சாண்டில்யன்
விலை ரூ.320
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+1?id=1102-1981-1270-1327
{1102-1981-1270-1327 [{புத்தகம்பற்றி யவன ராணி' நான் இதுவரை எழுதிய சரித்திரக் கதைகளுக்குள் சிறந்தது என நினைக்கிறேன். அது சிறப்பாய் அமைந்ததற்குத் தமிழ்ப் பெருமக்களின் உற்சாகந்தான் மூல காரணம். கதையில் காணப்படும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி, அவர்களின் சுக துக்கங்களை அனுபவித்து அவ்வப் பொழுது 'குமுதம்' காரியாலயத்துக்கும், நேரிடையாக எனக்கும் கடிதங்களை எழுதிய ஏராளமான வாசகர்கள் இந்தக் கதையின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்னால், அது சம்பிரதாயத்துக்காகவோ, அவையடக்கத்தின் அவசியத்தை முன்னிட்டோ சொல்லும் வார்த்தையல்ல. முக்காலும் உண்மை . } {பதிப்புரை ஆசிரியர் திரு. சாண்டில்யன் அவர்கள் “குமுதத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தொடர் கதையாக எழுதி, ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்ற மகோன்னத சரித்திர நாவலான 'யவன ராணி'யைப் புத்தகமாகப் பிரசுரிப்பதை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். இத்தகைய வாய்ப்பளித்த ஆசிரியர் திரு. சாண்டில்யன் அவர்களுக்கும், முக்கியமாக லட்சக்கணக்கான வாசக அன்பர்களுக்கும் பெருத்த நன்றி. எத்தனையோ வாசகர்கள் என்னிடம், “எப்பொழுது 'யவன ராணி' புத்தக வடிவில் வரும்?" என்று ஆவலோடு கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் பெருமகிழ்வளிக்கும் வண்ணம் மிகத் துரிதமாக 'யவன ராணி'யைப் புத்தக வடிவாக்கித் தந்துவிட்டேன். இதில் நான் மட்டும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. இதற்குத் துணை நின்றோர் பலர். துணைவர் களை நினைத்து நன்றி கூறுதல் முதல் கடமையாகக் கருதுகிறேன். இவ்வளவு பெரிய நாவலை எவ்வித இடையூறுமின்றி வெளிக் கொண்டுவரத் துணை நின்ற முழுமுதற் கடவுளுக்கு முதற்கண் நன்றி.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866