வடு
ஆசிரியர்:
கே.ஏ. குணசேகரன்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81?id=1341-4092-9487-3316
{1341-4092-9487-3316 [{புத்தகம் பற்றி கே. ஏ. குணசேகரனின் 'வடு' அவர் அனுபவங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இருக்கிறது. ஆசிரியராக வேலை பார்த்தபோதிலும் தன்னைப் படிக்கவைக்கத் தனது தந்தை பட்ட சிரமங்களைச் சொல்லும்போதும், அந்தக் Aகாலத்திலேயே எட்டாம் வகுப்புவரை படித்திருந்த தனது தாய் சினிமா கொட்டகையில் டிக்கெட் கொடுத்து, விறகு வெட்டி விற்று, புல்லறுத்து விற்றுத் தங்களைக் காப்பாற்றியதைச் சொல்லும்போதும், காலை வேளைகளில் ஊறவைத்த புளியங்கொட்டைகளைத் தின்று பசியாறியதைச் சொல்லும்போதும் நம்மிடம் இரக்கத்தைக் கோராத, ஆனால் நம் நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிற ஆற்றலைக் குணசேகரனின் மொழி பெற்றுள்ளது. இரட்டைமலை சீனிவாசனின் 'ஜீவிய சரித்திர சுருக்கம்' (1939) வெளிவந்த பிறகு தமிழில் எழுதப்பட்ட முதல் தலித் சுயசரிதை நூல் இது.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866