வனவாசம்

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 424
ISBN978-81-8402-612-2
Weight350 grams
₹185.00 ₹175.75    You Save ₹9
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



என்னோடு பழகியவர்கள் எனக்குப் பின்னால் அதனை வெளியிட்டால், அது எனக்குச் செய்யும் உதவியாகவே இருக்கும். எழுதுகிறவனைப் பொறுத்தல்ல, எழுதப்படும் செய்திகளைப் பொறுத்து இது ஒரு சுவையான நூல்தான். இது வெளிவந்த நேரத்தில் தொலைபேசி மூலமாக இதைத்தேடியவர்கள் பலர். வெளிநாடுகளில் இருந்து இதை அடைவதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலருக்கு நானே அனுப்பியிருக்கிறேன்.
ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமைய வேண்டும் என்றால், யாரும் நீண்ட காலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக் கூடிய கலை அல்ல!
மீசை முளைக்காத பருவத்தில் பிறந்த கிராமத்தை விட்டுப் பறந்து, காற்றிலே அலைமோதி, கடைசியில் தனித்து விழுந்துவிட்ட காகிதம் ஒன்று அந்த நாள் ஞாபகத்தை அச்சிலேற்றி விட்டது. 'எப்படி வாழவேண்டும்?' என்பதற்கு இது நூலல்ல; 'எப்படி வாழக்கூடாது!' என்பதற்கு இதுவே வழிகாட்டி.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

வாழ்க்கை வரலாறு :

கண்ணதாசன் பதிப்பகம் :