வள்ளலார் வாழ்க்கை வரலாறு
ஆசிரியர்:
பட்டத்தி மைந்தன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=1141-4247-5803-8789
{1141-4247-5803-8789 [{புத்தக பற்றி இந்த நிலவுலகத்தில் மகான்கள் பலர் இடை இடையே பிறந்து மகத்தான சாதனைகள் பல புரிந்தவண்ணம் இருக்கிறார்கள். இவ்விதம் இவர்கள் பிறக்காமல் இருந்தால் எப்படி? உலகம் உய்ய வேண்டுமல்லவா? எனவே இடை இடையே தோன்றிப் பல அற்புத சாதனைகளைப் புரிந்து இறைவனடி சென்று விடுகிறார்கள். இவ்விதமாக இந்தத் திருநாட்டில் பிறந்த மகான்களில், குறிப்பாக அருளாளர்கள் பலரில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் இராமலிங்க அடிகளாவார்.
<br/> இவருடைய செயல் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது தெய்வமே மனித உருவம் கொண்டு பிறந்து வந்தது என்று பெருமையுடன் கூறலாம்.
<br/> பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய இப்பெருமான் சமரச சன்மார்க்க நெறியை வளர்த்ததுடன் நின்று விடவில்லை , சமுதாய புரட்சிகளையும் செய்தவர் என்று கூறலாம். சாதி மதங்களால் ஏற்படும் சழக்குகள் அனைத்தையும் துணிந்து சாடியவர் என்றும் பெருமையுடன் கூறலாம்.
<br/> அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய இலட்சியங்கள் நிறைவு அடையவில்லை ; அவருடைய கனவுகள் பலிக்கவில்லை . ஆனால் இப்போதுதான் சிறுகச் சிறுக அவையெல்லாம் நனவாகி வருகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866