வள்ளியூர் வரலாறு

ஆசிரியர்: பேரா சு. சண்முகசுந்தரம்

Category வரலாறு
Publication காவ்யா பதிப்பகம்
FormatPaper back
Pages 490
Weight600 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'ஒங்க ஊர் எது?' என்று கேட்டதும் வள்ளியூர்' என்றுதான் நான் சொல்வேன்.
'வள்ளியூரில் எந்தத் தெரு?' என்று அடுத்த கேள்வி வரும். உடனே நான் வள்ளியூரில்லை, வள்ளியூர் பக்கத்துல சின்ன கிராமம் - காக்கரை என்று விளக்கிச் சொல்வேன். இங்குள்ள முருகன் கோவிலுக்கு மாதாந்தம் நடந்தபிறகுதான் நான் பிறந்ததாக என் தாய் சொல்வார். எனவே எனக்கு இந்த முருகன் மீது பற்று மிகுதி. சின்னவயதில் ஒரு தெப்பத் திருவிழாவைக் கூடவிட மாட்டேன். திருவிழாவில் முருகனைத் தவிர எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து தரிசித்துவிட்டுப் போவேன். என் சிறுகதைகளிலும் நாவல்களிலும் வள்ளியூரும் திருவிழாவும் தவறாமல் இடம் பெறும். என்றாலும் முருகன் வள்ளியை மோட்டார் சைக்கிளில் இந்தப் பொத்தை மீது துரத்தியதும், சைக்கிளில் மயில் அடிபட்டதும், வள்ளி மஞ்சள் தேய்த்துக் குளித்த இடமும் மறக்க முடியாத மனோரஞ்சிதக் கதைகள், இவற்றைப் பற்றி 2003ல் மலேசியாவில் ‘வள்ளியூரும் முருக வழிபாடும்' என்ற கட்டுரையை ஒரு கருத்தரங்கில் வாசித்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா சு. சண்முகசுந்தரம் :

வரலாறு :

காவ்யா பதிப்பகம் :