வள்ளுவம் காட்டும் வழக்கறிஞர்

ஆசிரியர்: வே. காசிநாதன்

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 152
Weight200 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866குறட்பாக்களுக்குப் பொருளும் விளக்கமும் சொல்லிக் கொண்டிருந்த காலம் மாறி இன்று வேகமாக முன்னேறிவரும் அறிவியல் கண்ணோட்டத்துடன் திருக்குறளின் கருத்துகளைச் சிந்திக்கின்றனர். அறவழியில் சிந்தித்துச் செயல்படும் அறிவினையே திருக்குறள் வலியுறுத்தக் காணலாம். அண்மைக் காலமாகத் திருக்குறள் கருத்துகளை நீதித்துறைச் சட்டங்களோடு பொருந்திப் பார்த்துச் சீர்தூக்கிப் பார்க்கும் முறை வளர்ந்துள்ளது. திருக்குறள் கூறும் சட்ட நெறிகள் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் சட்டநெறிகளை விளக்கி மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்பவர் வழக்கறிஞர். அந்த வகையில் சிந்தித்து எழுதப்பட்டுள்ள நூலே 'வள்ளுவம் காட்டும் வழக்கறிஞர்' என்னும் இந்நூல். வருமுன்னர்க் காப்பதுவே வள்ளுவம் கூறும் சட்டம். அதனையே தீங்கியல் சட்டம் (Torts) என்பர். குறளில் கூறப்பட்டுள்ள பல குற்றங்கள் இன்று தண்டனைக்குரிய குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
வழக்கறிஞர் V. காசிநாதன் M.A., B.L., அவர்கள் வள்ளுவரை வழக்கறிஞராகக் கண்டு அவருடைய அறநெறிகளை நியாயம் கூறும் சட்டங்களாகக் கொண்டு இந்நூலை அரிதின் முயன்று ஆக்கியுள்ளார். பொதுமக்களும் அடிப்படைச் சட்டங்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. திருக்குறள் அன்பர்களுக்கு இந்நூல் ஒரு வரமாக அமையும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வே. காசிநாதன் :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :