வான் தேடா மதி (பாகம் 1, 2)

ஆசிரியர்: ஸ்ரீகலா

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 1000
Weight750 grams
₹570.00 ₹513.00    You Save ₹57
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இரவு நேரத்தில் இரயில் 'தடக் தடக் தடக்' என்று தாளலயத்துடன் ஒரே சீராக ஓடி கொண்டிருந்தது.... ஜன்னல் புறம் அமர்ந்திருந்த அவந்திகா வெளிப்புறம் வேடிக்கை பார்த்தபடி வந்தாள்... இப்போது இருட்டு அவளது கண்களுக்கு நன்கு பழகி போயிருந்தது... முதலில் இருட்டை கண்டு பயந்த மனம் இப்போது நிலா வெளிச்சத்தில் நிழலோவியமாய்த் தெரிந்த மரங்களையும், மலை குன்றுகளையும், ஆற்றையும் கண்டு சிறிது ஆறுதல் அடைந்தது...
எதிர்காலம் என்னவென்று தெரியாது மருண்டவள் இப்போது சற்று தெளிந்தாள்... இனி எதையும் கண்டு பயப்படாது தனது குறிக்கோளில் வெற்றியடைய வேண்டும் என்று அவள் மனதிற்குள் சபதம் எடுத்து கொண்டாள்....
“சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துப் பெரிய, பெரிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்பதே எனது லட்சியம்..." அன்று ஊடகங்களின் முன் அவள் லட்சியத்துடன் கூறிய வார்த்தைகள் இன்றும் அட்சரம் பிசகாது அவளது காதுகளில் ஒலித்தது.....
“முடியும், என்னால் முடியும்...” நம்பிக்கையுடன் அவளது இதழ்கள் மெல்லமாய் முணுமுணுத்து கொண்டது...!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீகலா :

குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :