வால்காவிலிருந்து கங்கை வரை

ஆசிரியர்: ராகுல சாங்கிருத்தியாயன்

Category கட்டுரைகள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatHardbound
Pages 448
Weight800 grams
₹395.00 ₹375.25    You Save ₹19
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



‘ராகுல சாங்கிருத்யாயன்' என்ற மேதையின் உன்னதப் படைப்பான 'வால்காவிலிருந்து கங்கை வரை' மனித குலத்தின் 8000 ஆண்டு கால வரலாறு மட்டுமல்ல; ஓர் அமர காவியம்; இலட்சிய மகுடம். ரஷ்யாவில் ஓடும் வால்கா நதிக்கரையில் ஆரிய மனிதர்கள் குலங்களாக வாழ்ந்ததையும், அவர்கள் நகர்ந்து நகர்ந்து சில ஆயிரம் ஆண்டுகளில், சில நூறு தலைமுறைகளில் சிந்துவைத் தாண்டி கங்கையில் கரைந்ததையும் ராகுல்ஜி இதில் கதைகளாய் கூறியிருக்கிறார்.
இதற்கு, 8000 ஆண்டுகளுக்கு முந்தைய துவக்கக் கதையிலேயே மனித குலத்தின் தலைவியாய்த் திகழ்ந்தவள் பெண்தான் தாய்தான் என்பதை நிறுவுகிறார். அன்று தகப்பன் என்றொருவன் கிடையாது. தாய் மட்டுமே தலைவி. கோழியைச் சுற்றி வாழும் குஞ்சுகள்போல், மனித குலம் தாய்வழிச் சமூகத்தில் வாழ்ந்தது. அக்காலத்தில் வேட்டையாடுவது முதல் போர் நடத்துவது வரை பெண்ணே தலைமை தாங்கினாள். ஆயுதமேந்திய பெண் போராளிகள் ஆண்களுக்கு நிகராகப் போரில் ஈடுபட்டனர். கிடைக்கும் உணவை அனைவருக்கும் பங்கிட்டுத் தருவதிலும், குல உறுப்பினர்களைப் பாதுகாப்பதிலும் தாயே தலைமை ஏற்றாள். நிஷா, திவா ஆகிய இரு கதைகளும் இதை நிரூபிக்கின்றன...

உங்கள் கருத்துக்களை பகிர :
ராகுல சாங்கிருத்தியாயன் :

கட்டுரைகள் :

பாரதி புத்தகாலயம் :