வாஸ்து + ஆன்மிகம் =வாழ்க்கை

ஆசிரியர்: யோகஸ்ரீ மணிபாரதி

Category ஜோதிடம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 176
ISBN978-81-8476-476-5
Weight200 grams
₹155.00 ₹150.35    You Save ₹4
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் சொந்த வீட்டில் உள்ள சுக அனுபவமே தனிதான். அதனால்தான் இல்லாள், இல்லத்தரசி என்று மனைவியைக் கூறுவார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த இல்லம் எல்லோருக்கும் அமைகிறதா என்றால், அமைவதில்லை. அப்படியே அமைந்தாலும், அதில் ஏகப்பட்ட சிக்கல்கள்.தொல்லை தராத உள்ளம் கவரும் நல்ல இல்லமாக அமைய வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்ட இல்லத்தை அமைப்பது எப்படி என்பதையும், அப்படி அமைந்த இல்லத்தில் நாம் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளையும் சிறப்பாக எழுதித் தொகுத்து வழங்கி இருக்கிறார் டாக்டர் யோகஸ்ரீ மணிபாரதி. வீடுகளைக் கட்டும்போது நாம் எத்தகைய வாஸ்து வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை, சின்னச் சின்ன விஷயங்களையும் முத்துகளைக் கோத்ததுபோல் கோவையாக வழங்கி இருப்பது நூலின் சிறப்பு. ஆன்மிக வாழ்வில் நாம் வணங்க வேண்டிய தெய்வங்களையும் அவர்களை வணங்குவதற்குரிய வழிமுறைகள், காரணங்கள் மற்றும் பலன்களை எளிய முறையில் புராணக் கதைகளின் உதாரணங்களோடு தொகுத்து வழங்கி இருப்பது இந்த நூலுக்கு இருக்கும் கூடுதல் சிறப்பு. அந்த விதத்தில் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நல்ல நூல் இது.

'அரிதரிது மானிடராகப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, பேடு நீங்கிப் பிறத்தல்' என்றார் நமது ஒளவைப் பிராட்டியார். 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார் நம் வள்ளுவப் பாட்டனார். இவ்விரு முது தமிழ் ஆசான்கள் சிந்திய முத்துகளைச் சிந்தித்தாலே நமது நூலின் தலைப்புக்கான ரகசியங்கள் உங்களுக்குத் தெளிவாகும். வாழ்க்கைக்கு ஆதாரமானவை இரண்டு. ஒன்று வாழ்க்கையை நடத்தப் பயன்படுவது. மற்றொன்று வாழ்க்கையை ரசிக்க நம்பிக்கையை ஏற்படுத்துவது. குடும்பம் என்பது நான்கு சுவருக்குள்ளான வாழ்க்கை. அந்த வாழ்க்கையை நடத்த பயன்படுவது வீடு. அது சுபமாகவும் சுகமாகவும் அமைய வேண்டும். அதற்கு ஆண்டவன் அருள் வேண்டும். அவனன்றி, ஓர் அணுவும் அசையாது. உலக இயக்கங்களை இருந்த இடத்தில் இருந்து ரிமோட் செய்பவன் இறைவன். அவன் மீது பற்று வைத்து. அவன் மேல் நம்பிக்கை வைத்து என்றும் நாம் இன்புற்று வாழ்வோம். உலகம் உள்ள வரை நம் சந்ததியர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று எண்ணி இன்று நாம் நம் வாழ்க்கையை ரசிக்க, அனுபவிக்க நமக்கு ஊக்கமாக, ஆக்கமாக, அறிவாக, ஞானமாக விளங்குவது ஆன்மிகமே. பூவுலகில் இறைவன் அருள் தந்த இடங்கள் எல்லாம் ஆலயமாயின. ஆலய அமைப்பே சிற்ப சாஸ்திரத்தின் உச்சகட்ட வாஸ்து அமைப்பானது.

டாக்டர் யோகஸ்ரீ மணிபாரதி ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடி வட்டம் பள்ளத்தூரில் பிறந்தவர், தற்போது உடுமலைப்பேட்டையில் வசித்து வருகிறார். வாஸ்து பேராசிரியரான இவர் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா வாஸ்து ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்' என்னும் பயிற்சி மையம் ஒன்றும் நடத்தி வருகிறார். சித்த மருத்துவத்தில் பட்டயப் படிப்பு முடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிகளில் வாஸ்து மற்றும் சித்த மருத்துவம் குறித்த இவரது நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. வார, மாத, இதழ்களில் வாஸ்து பற்றிய விழிப்பு உணர்வு கட்டுரைகளை எழுதிவருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பெங்களூரு, சென்னை மற்றும் தூத்துக்குடியில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தினங்களில் விஜயம் செய்து வாஸ்து மற்றும் எண் கணித ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

விகடன் பிரசுரம் :