வியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள்

ஆசிரியர்: டி.என்.இமாஜான்

Category கட்டுரைகள்
Publication குறிஞ்சி பதிப்பகம்
FormatPaperback
Pages 160
Weight150 grams
₹60.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'சிந்தையைக் கிளறும் விந்தைச் செய்திகள்' என்னும் இந்நூலினைப் படிக்க நினைத்து, கையில் எடுத்ததற்கு முதற்கண் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்நூல் நான் எழுதியுள்ள 95-ஆவது நூலாகும். இந்நூலில் மொத்தம் 105 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் இந்திய மற்றும் உலக அளவில் நடந்த விந்தையான உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாகும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் உங்களை வியப்பில் ஆழ்த்தும். 'இப்படியும் நடக்குமா?' என மூக்கின் மேல் விரலை வைக்க நேரிடும். படித்து மகிழுங்கள். ஆச்சரியத்தில் மூழ்குங்கள்.
இந்தக் கட்டுரைகளில், ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும், அந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான நகைச்சுவைத் துணுக்குகளை எழுதியுள்ளேன். அவை உங்களைச் சிரிக்க வைக்கும். மொத்தத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல், இந்நூல் உங்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் என்பதில் ஐயமில்லை .
இந்நூல் சிறுவர் முதல் வயோதிகர் வரை அனைவருக்கும் பயன்படும். பொது விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவோர்க்கும், நகைச்சுவையை விரும்புவோர்க்கும் மிகுந்த நன்மை பயக்கும் நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டி.என்.இமாஜான் :

கட்டுரைகள் :

குறிஞ்சி பதிப்பகம் :