விரும்பிச் சொன்ன பொய்கள்
₹60.00 ₹48.00 (20% OFF)

விரும்பிச் சொன்ன பொய்கள்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 88
ISBN978-81-8493-628-5
Weight100 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன் . ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல நேர்கிறது. அன்றைய இரவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தில் ராதா மந்தாகினியின் மேல் பைத்தியமாகிறான். மந்தாகினி விடைபெற்றுச் செல்லும்போது ராதாவின் நினைவாக அவனது அம்பைப் பெற்றுச் செல்கிறாள். அதன் பின் அவள் சென்னையில் இறந்துபோகிறாள். அவள் மார்பில் ரத்தப் பிரவாகமாக செருகிக் கிடப்பது ராதாவின் அம்பு. மந்தாகினி கொலை செய்யப்பட்டாளா அல்லது மிகத் தீவிரமாக மரணத்தை நேசித்தவள் தற்கொலை செய்து கொண்டாளா? இக்கதையின் முடிவை ‘ஆம்’ ‘இல்லை’ என்ற வார்த்தைகளில் வாசகர்களிடமே விட்டு விடுகிறார் சுஜாதா. இந்த ‘விரும்பிச் சொன்ன பொய்கள்’ குங்குமச் சிமிழ் நாவலாக 1987ல் வெளியானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :