விஷ்ணு பல்லவன்

ஆசிரியர்: உதயணன்

Category சரித்திரநாவல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 358
ISBN978-93-82689-39-3
Weight350 grams
₹360.00 ₹324.00    You Save ₹36
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பண்டைக்காலத் தமிழக அரசியலில் சேரர் - சோழர் - பாண்டியர் என்ற மூவேந்தரோடு பல்லவர்களையும் சேர்த்து நால்வேந்தராகக் கூறுவதுதான் சரியாக இருக்கும்.
தமிழ் மன்னர்களுக்கு இணையானவர்கள் பல்லவர்கள். அவர்கள் தமிழர்களல்ல என்றாலும் தமிழ்நாட்டிற்கு அவர்கள் செய்திருக்கும் கலைத் தொண்டு மகத்தானது. அதற்கான அத்தாட்சிகளை காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் இன்ன பிற இடங்களிலும் இன்றும் காணலாம்.
அவர்களது கலைதான் பின்னால் சோழர்களது கலைகளுக்கு முன்னுதாரணங்களாகத் திகழ்ந்தன. காஞ்சியில் பல்லவர் கட்டிய கைலாயநாதன் ஆலயம் தான் பிற்காலத்தில் மாமன்னன் இராஜராஜ சோழனை தஞ்சையில் பெருவுடையார் கோயிலை அமைக்கக் காரணமாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது.
அத்தகைய சிறப்பான சிற்பக்கலையைப் பிற்காலப் பல்லவரின் முதல்வனான சிம்மவிஷ்ணு தொடங்கிவைத்தான். மாமல்லபுரத்தில் அவன் கட்டத் தொடங்கிய ஆதிவராகர் குடைவரைக் கோயில்தான் பிற பல்லவ மன்னர்களைச் சிற்ப விசித்திரங்களை அமைக்கத் தூண்டுகோலாக இருந்தது. முதல்வனான சிம்மவிஷ்ணு திருமாலை வணங்கும் பாகவதனாக இருந்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உதயணன் :

சரித்திரநாவல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :