வீரம்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category வரலாறு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 162
Weight150 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பெண்களும் ஆண்களோடு கைகோர்த்துக் கொண்டு வெள்ளையனைத் துரத்தி அடிக்க வீறுகொண்டு எழுந்தனர். 1857ஆம் ஆண்டிற்கு முன்பே வெள்ளையர்களின் - ஆதிக்கத்தை எதிர்த்து மங்கையர் போராட்டத்தில் குதித்து விட்டனர் என்பது நிதர்சனமான உண்மை. வீரமங்கை ராணி வேலுநாச்சியார்தான் விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் போராளி என்பதை வரலாறு கூறுகிறது. தன்னையே மனித வெடிகுண்டாக மாற்றி உயிர் நீத்த தியாக உருவாக விளங்குபவர் வேலுநாச்சியாரின் பணிப்பெண் குயிலி. இமயமலையைப் போன்ற கம்பீர தோற்றத்துடன், "வாருங்கள் வீரர்களே! எதிரிகளை சுக்கு நூறாக நொறுக்கித் தள்ளுவோம்?" என்று தன் வீரர்களைத் தட்டி எழுப்பினார் ஜான்சி ராணி. 1858ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17ஆம் நாள். கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரமுடன் போர் புரிந்தார் ஜான்சி ராணி. நேதாஜியின் வீர உரையைக் கேட்ட லட்சுமியின் உள்ளத்தில் பெரும் சுதந்திரத் தீ மூண்டது. இதனைத் தொடர்ந்து அதன் பின்னர் சிங்கப்பூரில் நடந்த ஒன்றிரண்டு கூட்டங்களில் நேதாஜியின் ஆவேச உரையைக் கேட்டார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

வரலாறு :

நக்கீரன் பதிப்பகம் :