வெற்றி உங்களுக்கே!

ஆசிரியர்: குருஜி ஈஷான் ஜோதிர்

Category சுயமுன்னேற்றம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 112
Weight100 grams
₹45.00 ₹36.00    You Save ₹9
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்த உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் மிகவும் விரும்பும் சொல் வெற்றி'. படிக்கின்ற மாணவர் தொடங்கி, தொழிலில் ஈடுபடும் பெரியவர்கள் வரை அனைவரையும் 'வெற்றி' என்ற சொல் உள்ளம் குளிர வைக்கிறது. வெற்றிக்காகப் பலரும் ஏங்குகிறார்கள். ஆனால் பவர் தாங்கள் தொடர்ந்து போராடுவதாகக் கூறிக் கொண்டாலும், எளிதில் அதை அடைந்துவிடுவதில்லை. அதற்கு, வெற்றிக்காகப் போராடுபவர் உணர்ந்த காரணங்களும் உண்டு; உணராத காரணங்களும் உண்டு.
ஒரு மனிதருக்கும் அவரது வெற்றிக்கும் இடையில் நிற்கும் தடைகளை அவர்கள் அகற்றிக் கொண்டால் ஏறக்குறைய முக்கால் பக்கு வெற்றி கிடைத்துவிடுகிறது. அதன் பிறகு அவர்களின் பயணம் எளிதாக இருக்கும்; உற்சாகமாக இருக்கும்.
'களத்திலிருந்து விலகிக் கொள்ளாதவரையில் நீங்கள் தோல்வியுற்றவர்கள் அல்ல' என்பதை முதலில் வெற்றி பெற விரும்புவர்கள் உணரவேண்டும். ஒருவர் எந்தத் துறையில் வெற்றி பெற நினைத்தாலும் களங்கள் மட்டுமே மாறுபடுகின்றவே தவிர வழிமுறைகள் ஒன்றுதான்!
சரியான குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து, முறையாகத் திட்டமிட்டு நகர்ந்தால் போதும், வெற்றி நிச்சயம் கிட்டும். வெற்றிக்கான வழிமுறைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. சுயமுன்னேற்றப் புத்தகங்கள் உங்களுக்கு வழிகாட்டும். அந்நூலில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது நீங்கள்தான்.
உங்கள் வயது, குடும்பச்சூழ்நிலை, நிதி நிலைமை எதுவுமே உங்கள் வெற்றியைப் பாதித்துவிட முடியாது. இதை உறுதியாக நம்புங்கள். அந்த நம்பிக்கையோடு இந்நூலினைப் படியுங்கள்; இதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்; நம்பிக்கையோடு செயலாற்றுங்கள் - வெற்றி நிச்சயம் உங்களுக்கே!

உங்கள் கருத்துக்களை பகிர :
குருஜி ஈஷான் ஜோதிர் :

சுயமுன்னேற்றம் :

சங்கர் பதிப்பகம் :