வெற்றி கலிலியோவிற்கே

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category அறிவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹25.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தனது பள்ளிப் பருவத்திலேயே பாடப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களைப் பரிசோதனை செய்து பார்த்த மாமேதை கலிலியோ ஆவார். மாணவர்கள் அறிவியல் மனப்பான்மைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணத்தை உருவாக்கியவரும் கலிலியோ தான். எதையும் ஆராய்ந்து பார்த்தப் பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும். சிந்தனையைத் தோற்று வித்தவர் கலிலியோ .
சமூகத்தில் காலம் காலமாக நம்பப்பட்டு வரும் பல நம்பிக்கைகள் நம்மிடம் உள்ளன. அந்த நம்பிக்கையில் அறிவியல் உள்ளதா அல்லது மூடநம்பிக்கை உள்ளதா என்பதைப் பகுத்தறிய வேண்டிய அவசியம் நமக்கு வேண்டும். இன்றைக்கு அறிவியல் நன்கு வளர்ந்து விட்டது. மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. எதையும் கண் மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை கலிலியோவின் வாழ்க்கை வரலாறு கூறுகிறது. கலிலியோ வின் வாழ்க்கை வரலாறு மாணவர்களை அறிவியல் மனப்பான்மை கொண்டவர்களாக மாற்றும் உண்மைகளை அஞ்சாமல் உரைக்கத் தூண்டும்.
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு உதவிகள் புரிந்த மனைவி திருமிகு. E. தில்லைக்கரசி அவர்களுக்கும், புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த நண்பர் திருமிகு. சரவணமணியன் அவர்களுக்கும் எனது நன்றி. மேலும், இப்புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத் திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்களுடன்
ஏற்காடு இளங்கோ

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

அறிவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :