வெள்ளைச் சர்க்கரையும் சர்க்கரை நோயும்

ஆசிரியர்: இ.க.இளம்பாரதி

Category உடல்நலம், மருத்துவம்
Publication புதிய வாழ்வியல் பதிப்பகம்
Pages 56
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சர்க்கரை என்று கூறும்போதே நமக்கு நாக்கில் இனிப்புத் தட்டும். சாதாரண உணவையும் சுவைமிக்கதாக மாற்றும் அற்புதமான ரசாயனம் இது. ஆம், உண்மையிலேயே ரசாயனம் தான் கரும்பில் இருந்து தயாரிக்கப்பட்டாலும், வெள்ளை நிறப் பளிங்கு கற்கள் போல நம் கைக்கு வந்து சேருவதற்கு முன்பாக, முழுவதும் ரசாயன முறையில் சுத்திகரிப் படுவதே நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரை.காலை எழுந்தவுடன் குடிக்கும் காஃபி, தேநீர் முதல் இரவில் படுக்கப்போகும் முன்பு குடிக்கும் பால் வரை, அதில் சர்க்கரை. கலந்தால் தான் உள்ளே இறங்கும். சாப்பிட மறுக்கும் குழந்தையையும் சாப்பிட வைக்கும் சர்க்கரையின் இன்சுவை. இந்த அளவுக்கு நம் உணவுப் பழக்கத்தில் முக்கியத்துவம் கொண்டதாக விளங்கும் வெள்ளைச் சர்க்கரைக்கு பின்னே ஒளிந்திருக்கும் ஆபத்துகளை நாம் அறிந்திருக்கிறோமாவெள்ளைச் சர்க்கரை, சர்க்கரை நோயை உண்டு பண்ணுகிறதா வெள்ளைச் சர்க்கரைக்கும் இதய பாதிப்பிற்கும் தொடர்பு இருக்கிறதா வெள்ளைச் சர்க்கரையினால் உடல் பருமன் அதிகரிக்கிறதா வெள்ளைச் சர்க்கரைக்கு சரியான மாற்று என்ன வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தும் செயற்கைச் சர்க்கரையினால் உடலுக்கு எதுவும் பிரச்சனை இருக்கிறதா இப்படி பல்வேறு சந்தேகங்களுக்கு எளிமையான விளக்கங்கள் அளிப்பதுடன் சில எச்சரிக்கைகளையும் விடுக்கிறது 'வெள்ளைச் சர்க்கரையும், சர்க்கரை நோயும்',இது சர்க்கரை நோயாளிகளுக்கான புத்தகம் மட்டுமல்ல. ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியஅத்தியாவசியமான

உங்கள் கருத்துக்களை பகிர :
உடல்நலம், மருத்துவம் :

புதிய வாழ்வியல் பதிப்பகம் :