வேள்வித் தூண்

ஆசிரியர்: உதயணன்

Category சரித்திரநாவல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 288
Weight300 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“புதுவது கிளந்த யாப்பின் மேற்றே" என்னும் தொல் காப்பியக் திய வகையில் புதிய வடிவத்தில் எழுந்த இலக்கிய வகையே நாவல் என்பது. இஃது சரித்திர நாவல், சமூக நாவல் என இருவகை என்பர்.சரித்திரக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு எழுவது சரித்திர நாவல். மானுடை சமூகத்தில் தோன்றும் அல்லது கூறப்படும் பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் எழுதப்படுவது சமூக நாவல். இந்த வேள்வித்தூண் என்பது ஒரு சரித்திர நாவலே. கிடைக்கின்ற தடயங்களைக் கொண்டு இடையே காணப்படும் இடைவெளிகளைக் கற்பனைக் கண்கொண்டு இயைபுபடுத்தும் வகையில் அமைவனவே சரித்திர நாவல்கள்.
அந்த வகையில் இந்த வேள்வித்தூண்' என்னும் இச்சரித்திர நாவல், வெறும் கதையாக மட்டும் அல்லாமல் ஆராய்ச்சி யைத் தூண்டும் நூலாக அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.பறவைகளைக் கொண்டு உணவுப் பிரச்சினைகளைத் தீர்த்தது, காஞ்சி காமாட்சியின் ஆதிநிலை, ஏகாம்பரநாதர் ஆலயத்தின் அன்றைய நிலை ஆகியன தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. காஞ்சியின் பழைய ஆலயமான திருவெஃ காவைப் பற்றிய விளக்கம் அரிது. அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது என்பார்களே! அப்படிப் பிறந்த மனிதர்களின் அரிய சீலங்களை விளக்கக் காணலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
உதயணன் :

சரித்திரநாவல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :