ஷீரடி சாய்பாபா

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 176
Weight200 grams
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்திய பூமி புண்ணிய பூமி. இணையில்லாத ஞானியர்களும் அருளாளர்களும் தோன்றி புனிதம் காத்த புனித பூமி. மக்கள் மதிக்கும் பெரும்பாலான மதங்களும் தோன்றி மக்கள் நலங்காக்கும் நன்னெறிகள் காட்டியுள்ள பெருமையுடையது. அந்த வகையில் இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இணைப்புப் பாலமாகத் தோன்றி ஈவு, இரக்கம், தயை, அருள் ஒழுக்கம் என்று பட்டை தீட்டிய பலமுனை வைரமாகத் திகழ்பவர் ஷீரடி சாய்பாபா அவர்கள். அவர் அற்புதங்கள் விளைத்த அருளாளர். இந்துக்களும் அவரிடம் ஆசிபெற்றனர். இசுலாமியர்பாலும் இரக்கம் காட்டினார். இந்து இசுலாமிய அருள் நூல்களையும் சாத்திரங்களையும் நன்கு அறிந்த அருளாளர். அவர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடியில் அவதரித்தவர்.
ஷீரடி சாய்பாபாவின் அருமை பெருமைகளை நுட்பமாகத் தேர்ந்து அருள் பொழியும் திருநூலாக “ஷீரடி சாய்பாபா” என்னும் பெயரில் ஆக்கித் தந்துள்ளார் ஆசிரியர் பட்டத்தி மைந்தன் அவர்கள். அனைவருக்கும் ஏற்ற வகையில் வரலாற்று நூல்களை எழுதிவரும் பட்டத்திமைந்தன் அவர்கள் பல்துறை அறிவுடையவர். அமைதியும் அருளும் தவழும் நடையில் இந்நூலை அமைத்துத் தந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :