ஸ்ரீமத் பகவத் கீதை
ஆசிரியர்:
மகாத்மா காந்தி
விலை ரூ.15
https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88?id=1370-3274-3630-0397
{1370-3274-3630-0397 [{புத்தகம்பற்றி இந்து சமய நூல்களில் கண்ணன் அருளிய கீதை தனித்த சிறப்பிடம் பெறுகிறது. சங்கரர், இராமானுஜர், மத்வர் போன்ற ஆச்சாரியர்கள் தம் தம் பாணியில் கீதைக்கு உரை கண்டுள்ளனர். ஆத்ம வளர்ச்சியின் உயர்ந்த குறிக்கோள்களைக் கீதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இவற்றை வாழ்க்கையில் நடத்திக் காட்ட முயன்ற காந்தியடிகளும் கீதைக்கு உரை கண்டுள்ளார். சாதாரண மக்களுக்கு விளங்கும் முறையில் காந்தியடிகள் எது கீதையின் சிறப்பெனக் கருதினார்களோ, அதை எளிய நடையில் எழுதியுள்ளார்கள். தம் பாணியில் கண்ட உரைக்கு அனாசக்தியோகம் என்ற பெயரிட்டு அதற்கு ஒரு சிறந்த முன்னுரையும் குஜராத்தியில் எழுதியுள்ளார்கள். அதற்கு ஹிந்தி மொழி பெயர்ப்பும் வந்துள்ளது. அதிலிருந்து ஸ்ரீ க. சந்தானம் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். ஸ்ரீ சந்தானம் அவர்களின் அனுமதி பெற்று தஞ்சையிலிருந்த சர்வோதய பிரசுராலயம் தமிழில் பல ஆண்டுகளுக்கு முன் இதனை வெளியிட்டது. காந்தியடிகள் கீதைக்குத் தரும் விளக்க உரைகளைத் தமிழன்பர்கள் படித்துப் பயன்பெற வேண்டுமென விரும்பி இதனை காந்திய இலக்கியச் சங்கம் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866