ஸ்ரீ குருகீதை

ஆசிரியர்: அண்ணா சுப்ரமணியன்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 143
ISBN978-81-7120-338-8
Weight150 grams
₹55.00 ₹52.25    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எவருக்கு தெய்வத்திடம் பக்தி உளதோ, தெய்வத்திடம் போலவே குருவிடமும் பக்தி உளதோ அந்த மகாத்மாவிற்கு உபநிஷதங்களில் கூறப்பட்ட பொருள்கள் தாமாகவே பிரகாசிக்கின்றன. - சுவேதாசுவதர உபநிஷத்து.
குரு பக்தியால் வாழ்க்கைப் பயனைக் குறைவின்றி அடையலாம். குருபக்தி உள்ளவனுக்கு சாஸ்திரங்களைப் படிக்காமலேயே ஞானம் சித்திக்கும் என்பதற்குச் சாந்தோக்கிய உபநிஷதம் ஸத்யகாமனுடைய கதையைக் கூறுகிறது. ஸத்தியகாமனுடைய கோத்திரம் தெரியாத போதும் குரு அவனுக்கு உபநயனம் செய்வித்து அவனை ஆசிரமத்து மாடுகளை மேய்த்துப் பராமரிக்கும் தொழிலில் ஏவினார். நானூறு பசுக்கள் ஆயிரமாக வளரும் வரை அவன் மேய்த்தான். உடலை வருத்திச் செய்யும் குருசேவை ஞானோதயத்திற்குச் சாதனமாகும் என்பதும், மனம் சேவையால் பக்குவமடைந்தபோது வானும் மண்ணும் மலையும் நதியும் ஒவ்வொன்றும் உபகுருவாக நின்று பேசாமல் பேசி ஞானத்தைப் புகட்டும் என்பதும் இக் கதையால் விளக்கப்படுகிறது. இப்படி இதிகாசங்களிலும் புராணங்களிலும் எத்தனையோ வரலாறுகள் காணப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அண்ணா சுப்ரமணியன் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண மடம் :