ஸ்ரீ சக்கர ரகசியங்கள் (நல்லன எல்லாம் தரும் அற்புத யந்திரம்)

ஆசிரியர்: வேணு சீனிவாசன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 240
Weight250 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஸ்ரீ சக்கரத்தை ஸ்ரீ யந்திரம் என்று சொல்வதுண்டு. ஸ்ரீவித்யா பூசை என்றாலே சக்கர பூசை தான். ஒவ்வொரு கடவுளுக்கும் பிரத்தியேகமாக ஒரு யந்திரம் உண்டு. ஆனாலும் சிவ பூசையோ விஷ்ணு பூசையோ செய்பவர்கள் யந்திரங்களை வைத்துச் செய்வதில்லை. சிவபூசைக்கு லிங்கத்தையும், விஷ்ணு பூசைக்கு சாளக்கிராமத்தையும் வைத்தே பூசை செய்வது வழக்கத்தில் இருக்கிறது. இதைப்போல அம்பாளுக்கு இயற்கையில் ஸ்வர்ணரேகா சிலா என்பது கிடைக்கிறது. இதை அம்பாளின் சொரூபமாக வைத்து பூசைகள் செய்வதுண்டு. ஆனால் இப்படிச் செய்பவர்கள் மிக மிகச் சிலரே. சுப்பரமண்யரை பூஜை செய்பவர்கள் வேல் வைத்து செய்கின்றனர். இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் உருவோடு கிடைக்கும் சிலைகள் அல்லது இயற்கையில் கிடைக்கும் கற்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்வது வழக்கத்தில் இருக்கின்ற போது, அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீ சக்கரத்தை வைத்தே பூசைகள் செய்யப்படுகின்றன. இது தான் ஸ்ரீ சக்கரத்தின் சிறப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
வேணு சீனிவாசன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :