ஒரு கடலோர கிராமத்தின் கதை

ஆசிரியர்: தோப்பில் முஹம்மது மீரான்

Category கதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 215
ISBN978-81-87477-87-7
Weight300 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். கிராமத் தலைவனும் ஊர் முதல் குடியுமான 'வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளியின் முன் அடங்க மறுக்கிறான். சுறாப் பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது,தென் பத்தனைத் தேடி வந்த சித்து வேலைகள் தெரிந்த மாலத்தீவு தங்களையும் அவன் உதாசீனம் செய்கிறான். இதை மீறலின் குறியீடாகக் கருதும் வாசக மனம் கூடவே மஹ்மூதின் மனைவியையும் மகளையும் நினைத்து வருந்துகிறது. வடக்கு வீட்டு முதலாளியின் இரக்கமற்ற செயல்கள் குறித்து நாவல் விவரித்துச் செல்லும்போதே அதன் அடிநாதமாக, வெற்றுப் பிரதாபம் காரணமாக நசிந்துகொண்டிருக்கும் முதலாளியைப் பற்றிய பரிதாபமும் இழைந்து செல்கிறது.நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
தோப்பில் முஹம்மது மீரான் :

கதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :