100 கவிஞர்கள் 100 கவிதைகள்
ஆசிரியர்:
தங்கம் மூர்த்தி
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/100+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+100+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1325-4568-0002-3999
{1325-4568-0002-3999 [{புத்தகம் பற்றி பெருக்கெடுத்தோடும் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்படும் கல்லில் எந்தக்கல் கூழாங்கல்லாகுமென்று ஆற்றுக்கும் தெரியாது. கல்லுக்கும் தெரியாது. ஆற்றின் குளுமையைத் தனக்குள் பொதிந்து கொண்டு கூழாங்கல்லாகும் கல்லொன்றே பிரவாகமெடுத்தோடிய ஆற்றின் படிமம்.படைப்பும் ஆற்றின் பிரவாகமே. காலத்தின் அநாதியில் உருண்டு புரண்டு மென்மையாகி, தன்மை கோர்த்து... படைப்பாளியின் ஆன்மா சுமந்து நிற்கும் படைப்புகள் சில 100 கவிஞர்களின் 100 கவிதைகள் இத் தொகுப்பில் கூழாங்கற்களாய்க் குளிர்ந்து கிடக்கின்றன.வெள்ளம் பார்க்கப் போகிறவர்களின் கண்களுக்குக் கூழாங்கற்கள் புலப்படாது. கூழாங்கல் பார்க்க, நுண ரசனை வேண்டும். பேருருவின் முன், சிற்றழகியலைக் காண ஆன்ம தரிசனம் வேண்டும். கவிஞர் தங்கம் மூர்த்தி, தன் நுண் ரசனையில் கண்டெடுத்தவையே '100 கவிஞர்கள் 100 கவிதைகள்', ஓடி மறைந்த காலத்தின் பக்கங்களில் ஒளிரும் மின்மினிக் கவிதைகள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866