37 ஷேக்ஸ்பியர் சிறுகதைகள்

ஆசிரியர்: ஷேக்ஸ்பியர்

Category சிறுகதைகள்
Publication முன்னேற்றப் பதிப்பகம்
FormatPaper back
Pages 310
ISBN978-81-950653-5-6
Weight350 grams
₹350.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் மொத்தம் 37 நாடகங்கள் எழுதி உள்ளார். அவை வரலாறு (History), துன்பியல் (Tragedy), இன்பியல் (Comedy) என 3 வகையாக பிரிக்கப்படுகின்றன. அவரது துன்பியல் மற்றும் இன்பியல் நாடகங்களில் உட்பிரிவுகள் உண்டு, துன்பியல் வகையில் மட்டும் அவர் 10 நாடகங்கள் எழுதி இருக்கிறார். அவை ஆரம்ப கால நாடகங்கள், 4 பெரும் அவல நாடகங்கள், ரோமானிய நாடகங்கள் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வருகின்றன.
ஷேக்ஸ்பியர் எழுதிய 37 நாடகங்களையும் எளிய, இனிய தமிழில் நாவலாக படைக்க வேண்டும் என்பது எனது மாபெரும் இலட்சியம். இந்தத் திட்டத்தில் முதலில் மெக்பெத்' உருவானது. அது அவரது 4 பெரும் அவல நாடகங்களுள் ஒன்று. நீண்ட இடைவெளிக்குப் பின் ஷேக்ஸ்பியரின் 'சரிக்குச் சரி' ( Measure for Measure) எனும் அவல இன்பியல் நாடகத்தை நாவலாக எழுதி வெளியிட்டேன். 'அவல இன்பியல்' என்பது முடிவை மட்டும் மகிழ்ச்சிகரமாக கொண்ட ஒரு துன்பியல் நாடகமாகும். இலக்கிய வடிவத்தை மாற்றி நான் வழங்கிய மேற்கண்ட இரண்டு படைப்புகளும் எனக்குத் தேடித் தந்த புகழ் அலாதியானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுகதைகள் :

முன்னேற்றப் பதிப்பகம் :