1955 ஆம் ஆண்டு தன் எழுத்துகளை தானே பதிப்பிப்பதற்காக தமிழ்வாணன் அவர்களால் தொடங்கப்பட்ட பிரசுரம். 55 ஆண்டுகள் கடந்து பதிப்பகத் துறையில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. வாழ்வு முன்னேற்றம், கம்ப்யூட்டர், சமையல், பஞ்சாங்கம், ஜோதிடம் என 300க்கும் மேற்பட்ட சப்ஜெக்ட்டுகளில் 8000க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட முதல் நிலையிலுள்ள பதிப்பகம். இன்றும் 3000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் விற்பனையில் உள்ளன. லேனா தமிழ்வாணன் அவர்களின் ஒரு பக்கக் கட்டுரைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் சுய முன்னேற்றக் கட்டுரைகள், சிறுவர் சிறுமியர்களுக்கான நூல்கள் என பல நூல்களை விற்பனை செய்து வருகிறோம். எந்த தலைப்புகளில் புத்தகம் வேண்டுமானாலும் மணிமேகலைப் பிரசுரத்தில் கிடைக்கும் என்ற பெயர் பெற்ற பதிப்பகம்.